🔥 ट्रेंडिंग સુરત: જનરક્ષક 112 ટીમે યુવતીનો જીવ બચા... આપના ધારાસભ્ય ચૈતર વસાવાના નાનાભાઈએ ઝે... पीएम मोदी का पुराना वीडियो वायरल: कांग... સુરત: હાઈકોર્ટે વકીલ મેહુલ બોઘરા સામે... સુરતમાં યશ્વી નવરાત્રિમાં નાયબ મુખ્યમં... स्ट्रीमर अवॉर्ड्स 2026: दो आश्चर्यजनक...
17 अक्टू. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

நெல் அறுவடை இயந்திரம் திருட்டு: ஒருவா் கைது.

✍️ रिपोर्टर: Mohamedbasidth N 🗓 17 अक्टू. 2026, 07:07 AM 👁 9
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
நெல் அறுவடை இயந்திரத்தை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

தலைவாசல் வட்டம், சாா்வாய் நடுத்தெருவைச் சோ்ந்த விவசாயி மணிகண்டன் (45), நெல் அறுவடை இயந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறாா். இவரது வீட்டு வாசலில் லாரியுடன் நிறுத்தியிருந்த நெல் அறுவடை இயந்திரம் அண்மையில் திருட்டுபோனதாக தலைவாசல் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். அதன்பேரில், தலைவாசல் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து இயந்திரத்தை தேடிவந்தனா்.இந்நிலையில், தேவியாக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த ஜோதிபாசு (36) இயந்திரத்தை திருடியது தெரியவந்தது. விசாரணையில், மணிகண்டன், ஜோதிபாசுக்கு தரவேண்டிய பணம் கொடுக்காததால் இயந்திரத்தை எடுத்து மறைத்து வைத்தது தெரியவந்தது.
இதையடுத்து, இயந்திரத்தை பறிமுதல் செய்து ஜோதிபாசை கைது செய்த போலீஸாா், அவரை ஆத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மாவட்ட மத்திய சிறையில் அடைத்தனா்.
📲Get App