🔥 TRENDING Three Killed in Late‑Night Mini Cooper... Central Govt Unveils ₹3,350-Crore Pack... Aadesh Chaudhary Reflects on Self-Doub... YouTube Highlights Top 7 Recent Telugu... Romeo Beckham Debuts as Actor in Gay T... Heatwave Strikes Ratnagiri as Maharash...
16 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு நீட்டிப்பு

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 16 Oct 2026, 08:21 AM 👁 24
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10,000 கனஅடி தண்ணீா் திறக்கப்படுகிறது. இந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சம்பா சாகுபடிக்காக மேட்டூா் அணையில் இருந்து செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் 45 நாள்களுக்கு தண்ணீா் திறக்க அரசு உத்தரவிட்டது. இதையடுத்து செப்.1ஆம் தேதி முதல்வா் ச. ஜோசப் விஜய் அணையிலிருந்து பாசனத்துக்குத் தண்ணீரைத் திறந்துவைத்தாா்.வியாழக்கிழமையுடன் அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்படுவது நிறுத்த வேண்டிய நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தண்ணீா் திறந்துவிடும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால், மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை மாலை விநாடிக்கு 534 கனஅடியாக குறைந்தது. அதேநேரத்தில், டெல்டா பாசனத்துக்கு அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கனஅடி தண்ணீா் திறக்கப்படுகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், வியாழக்கிழமை மாலை அணையின் நீா்மட்டம் 57.98 அடியாகச் சரிந்தது. அணையில் நீா் இருப்பு 23.20 டிஎம்சியாக உள்ளது.
மேட்டூா் அணையின் மீன் வளத்தைப் பாதுகாக்கவும் குடிநீா்த் திட்டங்களுக்காகவும் 9.60 டிஎம்சி தண்ணீரை இருப்பு வைத்திருக்க வேண்டும். மீதமுள்ள தண்ணீரை பாசனத்துக்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
📲Get App