🔥 TRENDING શિષ્યવૃત્તિ માટે ની અરજી ફોર્મ ભરવા ની... હિંમતનગરમાં નવરાત્રી દરમિયાન ખેલૈયાઓ મ... माँ कुष्मांडा की आराधना से जीवन में सु... आयुष्मान योजना: लखनऊ-गोंडा के 21 निजी... સાબરમતી રિવરફ્રન્ટ પર પોલીસનું બોર્ડ લ... लखीमपुर में सड़क दुर्घटना में दो लोगों...
14 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

வங்கியில் போலி நகை வைத்து மோசடி இருவர் கைது

✍️ Reporter: A RAM PRABHU 🗓 14 Oct 2026, 11:24 AM 👁 8
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா மேல்காவனூர் பகுதியில் செயல்பட்டு வரும் பொது துறையான பரோடா வங்கியில், தங்க நகைக் கடன்கள் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வங்கி நிர்வாகத்தினர் நடத்திய ஆய்வில், போலி நகைகளை அடகு வைத்து கடன் பெற்றது தெரியவந்தது.
வங்கியில் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றவர்களில் சிலர், போலி நகைகளை வழங்கி மோசடியில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. இதன் மூலம் வங்கிக்கு சுமார் ரூபாய் ஒரு கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வங்கியில் நகை மதிப்பீட்டாளர்களாகப் பணியாற்றிய சீனிவாசன் (55), உடந்தையாக இருந்த பார்த்திபன் (32) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மோசடியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா, போலி நகைகளைப் பயன்படுத்தி எத்தனை பேர் கடன் பெற்றுள்ளனர், வங்கிக்கு ஏற்பட்டுள்ள மொத்த இழப்பு எவ்வளவு என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📲Get App