🔥 ट्रेंडिंग ਨਾਨਾ ਪਾਟੇਕਰ ਦੀ ਮੌਤ ਦੇ ਮਾਮਲੇ ''ਚ ਨਵਾਂ ਮ... भव्य ऐतिहासिक विदाई समारोह ग्रामीणों क... ઇડર-હિંમતનગર રોડ પર બે કાર વચ્ચે ગંભીર... कांग्रेस और भाजपा को सिखों का दुश्मन ब... महाराजा अग्रसेन जी की भव्य शोभायात्रा:... जयनगर में SSB की बड़ी कार्रवाई, 320 ली...
11 अक्टू. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
स्वास्थ्य

பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு: சங்கராபுரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல்

✍️ रिपोर्टर: EDWIN MICHAEL RAJ 🗓 11 अक्टू. 2026, 03:48 PM 👁 27
यहाँ देखें: ▶️ YouTube
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

தமிழகம் வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு கொடி ஏந்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் மும்முனை சந்திப்பில், தமிழகத்திற்கு வருகை புரிந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளிடமிருந்து போலீசார் கருப்பு கொடியை பிடுங்கியதால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் சங்கத்தினர் காவல்துறையை கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📲Get App