🔥 ट्रेंडिंग मनिपुर में नई हिंसा में मौतों की संख्य... मेघालय सीएम ने दिल्ली शिखर सम्मेलन में... एमपी हाईकोर्ट ने भोपाल पार्षद का आर्म्... इंदौर में मैच के दर्शकों के बीच झड़प,... ओंकारेश्वर के गोमुख घाट पर गाज़ियाबाद... भागलपुर में शारदीय नवरात्र का शुभारंभ:...
11 अक्टू. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
स्थानीय

புதுச்சேரியில் தலையில் பிளாஸ்டிக் குடத்துடன் தவித்த நாய்க்குட்டிக்கு மீட்பு

✍️ रिपोर्टर: Sudhakaran 🗓 11 अक्टू. 2026, 09:20 PM 👁 22
यहाँ देखें: ▶️ YouTube
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

புதுச்சேரி உழவர்கரை நகராட்சி நிர்வாகம் மற்றும் மருத்துவர் செல்வமுத்து குழுவினரின் அதிரடி நடவடிக்கையால், தலையில் பிளாஸ்டிக் குடத்துடன் 6 மாதங்களாக தவித்த செல்லப்பிராணி மீட்கப்பட்டது. பொதுமக்கள் அவர்களைப் பாராட்டினர்.

புதுச்சேரி மாநிலம், உழவர்கரை, ரங்காநகர் பகுதியில் கடந்த 6 மாதங்களாக தலையில் பிளாஸ்டிக் குடத்துடன் சிக்கித் தவித்து வந்த ஒரு செல்லப்பிராணியின் பரிதாப நிலை கண்டு, அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

இது குறித்து உழவர்கரை நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், நகராட்சி நிர்வாகம் மற்றும் மருத்துவர் செல்வமுத்து தலைமையிலான குழுவினர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்தனர்.

அதிரடியாக செயல்பட்ட குழுவினர், அந்த செல்லப்பிராணியின் தலையில் சிக்கியிருந்த பிளாஸ்டிக் குடத்தை வெற்றிகரமாக அகற்றினர். நீண்ட நாட்களாக துன்பத்தில் இருந்த செல்லப்பிராணிக்கு நிவாரணம் அளித்த இந்த நடவடிக்கையை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
📲Get App