🔥 ट्रेंडिंग एटा: खाद्यान्न वाहनों पर दिखेगा 'राज्य... ఆదిలాబాద్ గాదిగూడ: బ్రెయిన్ క్యాన్సర్... एटा पुलिस द्वारा साइबर सुरक्षा जागरूकत... एटा में मिशन शक्ति अभियान के तहत महिला... राजस्थान के मुख्यमंत्री भजनलाल का कहना... ગુજરાત પ્રદેશ ભાજપ આદિજાતિ મોરચાની બેઠ...
10 अक्टू. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

உலக மனநல நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

✍️ रिपोर्टर: Mohamedbasidth N 🗓 10 अक्टू. 2026, 08:16 AM 👁 23
यहाँ देखें: 📘 Facebook
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
உலக மனநல நாள் அக்டோபர் 10-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள ரோட்டரி கிளப் ஆஃப் சேலம் மிட் டவுன் மற்றும் சேலம் சரவணா மருத்துவமனை இணைந்து, நாலேஜ் தொழில்நுட்பக் கல்லூரி அரங்கத்தில் உலக மனநல நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.
இந்த நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மகேஸ்வரி தலைமை வகித்தார். தனது தலைமை உரையில், கல்லூரி மாணவ, மாணவிகள் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆஃப் சேலம் மிட் டவுன் தலைவர் எம். எம். கல்யாணராமன், கல்லூரி முதல்வர் விசாகவேல், மனநல மருத்துவர் டாக்டர் அசோக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், ரோட்டரி துணை ஆளுநர் தாரா ராஜகணபதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
📲Get App