சேலம் மாவட்டம் சாலையோர வியாபாரிகள் சங்க கூட்டுக்குழு சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
சேலம்:சேலம் கோட்டை மைதானத்தில், 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்க கூட்டுக்குழு சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
யு.டி.யு.சி., மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். சாலையோர விற்பனையாளர் பாதுகாப்பு மற்றும் முறைபடுத்துதல் சட்டம்-2014ன்படி, மத்திய, மாநில அரசுகள் சாலையோர விற்பனையாளர்களை பாதுகாத்தல்; உண்மையான சாலையோர விற்பனையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கிடு. நீதிமன்ற வழிகாட்டுதல்படி, மாவட்டம் முழுவதும், உள்ளாட்சி நிர்வாகமே கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.மகளிர் குழுக்களுக்கு, முறைகேடாக வியாபாரிகள் என அடையாள அட்டை வழங்கி, வங்கி மூலம் கடன் வழங்கும் மோசடியை தடுத்து, உண்மையான சாலை வியாபாரி
களுக்கு மானியத்துடன் வங்கி
கடன் வழங்குதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். நிர்வாகிகள் மோகன், கோவிந்தன், சம்பத், ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.