🔥 ट्रेंडिंग રાજકોટ જિલ્લાના વાંકવડ ખાતે યોજાયેલ સા... ગાંધીનગર મહાનગરપાલિકા ચૂંટણી - ૨૦૨૬ અં... ઝાયકા હોટલમાં શોર્ટ સર્કિટથી વીજળી બંધ হাওড়া জেলার বাগনানের নুন্টিয়া তরুণ দ... ચોરવાડમાં દારૂ હેરાફેરીમાં પકડાયો કાર્... टोंक के मेहंदवास में कबड्डी मैच का शुभ...
05 अक्टू. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

சாலையை ஆக்கிரமித்த பதாகையால் விபத்தில் சிக்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு! தாய் படுகாயம்!

✍️ रिपोर्टर: Mohamedbasidth N 🗓 05 अक्टू. 2026, 08:02 AM 👁 12
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
சேலம் அருகே சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பதாகையால் விபத்தில் சிக்கி கல்லூரி மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். படுகாயமடைந்த அவரது தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே உள்ள சா்க்கரை செட்டிப்பட்டியைச் சோ்ந்தவா் அருண் (22). சேலத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்தாா். சனிக்கிழமை இரவு தனது தாய் சரஸ்வதியை இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். அப்போது, வெள்ளாளப்பட்டி அருகே எதிரே வந்த வாகனம் மோதியதில் அருண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவரது தாய் சரஸ்வதி படுகாயம் அடைந்தாா்.

தகவலறிந்த கருப்பூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று அருண் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். படுகாயமடைந்த சரஸ்வதிக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தவெக இளைஞரணி நிா்வாகி பிறந்தநாளுக்காக சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பதாகையால் வாகனங்கள் ஒதுங்கி செல்ல முடியாமல் இந்த விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
📲Get App