ஆம்பூரில் பழைய இரும்பு பொருட்கள் சேமிப்பு குடோனில் பயங்கர தீ விபத்து
Watch on:
▶️ YouTube
தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சந்தைப்பேட்டை பள்ளிவாசல் தெருவில் அஸ்கர் என்பவர் பழைய வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் இரும்பு பொருட்கள் சேமித்து வைக்கும் குடோன் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இன்று குடோனில் இருந்து திடீரென புகை வெளியேறியதை அப்பகுதி பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து அஸ்கர் கானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது குடோனில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன.
இதையடுத்து உடனடியாக ஆம்பூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பழைய வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தது,
குடோனில் பொருட்களை வெல்டிங் இயந்திரத்தை வைத்து உடைக்கும் பணியில் ஈடுபட்ட போது தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது இது குறித்து
ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.