🔥 TRENDING नवादा के सूर्य मंदिर परिसर में विशेष स... आंगनवाड़ी केंद्रों पर ‘आंगन का मिलन’ स... Shillong Cherry Blossom Festival 2026... Meghalaya Driver Aneesh Sangma Wins X3... Meghalaya Man Returns to Class 10 Afte... Truck Collides With Car on Amritsar‑Ta...
01 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
தமிழ்நாடு நாமக்கல் மாவட்டத்தில் வெடி விபத்து மூன்று பேர் பலி

தமிழ்நாடு நாமக்கல் மாவட்டத்தில் வெடி விபத்து மூன்று பேர் பலி

✍️ Reporter: Rangarajan Kondappanaickar 🗓 01 Oct 2026, 06:52 PM 👁 11
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

30 9 26 புதன்கிழமை அன்று நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் கொப்பளம் பாளையம் கிராமத்தில் கிராமத்தில் தீபாவளி விற்பனைக்காக வைத்திருந்து பட்டாசுகள் வெடித்து உரிமையாளர்கள் உரிமையாளர் கணவன் மனைவியும் ஊழியர் ஒருவரும் விபத்தில் பலியானார்கள் வேலூர் காவல் துறையினர் விஷயம் அறிந்து விரைந்து சென்றார்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டார்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து உடல்களை மீட்டு காவல் துறையினர் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு உடல்களை அனுப்பி வைத்தார்

தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டம் கொப்பளம் பாளையம் கிராமத்தில் மைனர் வீரப்ப பிள்ளை நகரில் ராஜசேகர் என்பவர் தன் மனைவி சத்யாவுடன் வீட்டில் வசித்து வருகிறார் அவர்கள் பட்டாசு விற்பனையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள் நேற்று நேற்று மாலை ராஜசேகரும் உதவியாளர் பொன்மலர் என்பவரும் தீபாவளிக்கு விற்பனைக்காக கொண்டு வந்த பட்டாசுகளை சரி பார்த்துக் கொண்டிருந்தனர் அப்பொழுது திடீரென்று பட்டாசுகள் வெடித்து மிகப்பெரிய சத்தத்துடன் ஊரையே அதிர வைத்தது சத்தத்தை கேட்ட மனைவி சத்யா அங்கு செல்ல மூவருமே கட்டிடமே சிதறி மேல் தளம் இடிந்து விழுந்து மூன்று பேரும் பலியானார்கள் செய்தி அறிந்த பரமத்தி வேலூர் போலீசார் விரைந்து வந்து வேலாயுதம் பாளையம் தீயணைப்பு படை வீரர்களுக்கு செய்தி அனுப்பி அவர்களும் விரைந்து வந்து தீயை அணைத்து உயிரிழந்த உடல்களை மீட்டார்கள் காவல் துறையினர் உடல்களை பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள் எப்படி நடந்தது இது விபத்து என்பதை காவல்துறையினர் விசாரணையில் இறங்கி இருக்கிறார்கள் இந்த செய்தி நாமக்கல் மாவட்டமே மிகப்பெரிய பயத்தில் பரபரப்பாகியது ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு அந்த இடத்திற்கு வந்து விட்டார்கள் பொதுமக்கள் பீதியுடன் அங்கு கூடினர்
📲Get App