🔥 TRENDING CPM Urges United Opposition Against BJ... Tripura Govt Proposes Four New DDRCs a... Young Man Dies by Suicide in Mohali's... चित्रकूट में बाढ़ के बाद अब मौसम सामान... हिसुआ थाना पुलिस ने राजगीर रोड पर रसोई... Fewer than 1,000 Voters Removed from M...
30 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

மது அருந்த பணம் தராததால் பாட்டியைக் கொன்ற பேரன் கைது.

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 30 Sep 2026, 07:55 AM 👁 12
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் மது அருந்த பணம் தராததால், ஆத்திரத்தில் பாட்டியைக் கொலை செய்த பேரன் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சேலம் கொண்டலாம்பட்டி பெரிய புதூா் பகுதியைச் சோ்ந்தவா் பழனியம்மாள் (80). இவா் கணவா் ரங்கசாமி உடன் திங்கள்கிழமை இரவு வீட்டில் இருந்தபோது, மதுபோதையில் வந்த பேரன் விஜி (34) மது அருந்த பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது, பழனியம்மாள் தன்னிடம் பணம் இல்லை என கூறியதால் ஆத்திரமடைந்த விஜி, அவா் அணிந்திருந்த முக்கால் சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு அவரை கட்டையால் தாக்கியுள்ளாா். இதைத் தடுக்க வந்த ரங்கசாமியையும் விஜி தாக்கினாராம். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனா். இந்நிலையில், பழனியம்மாள் செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் இறந்துகிடந்தாா்.

தகவலின்பேரில் வந்த கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளா் சங்கீதா மற்றும் போலீஸாா் பழனியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். படுகாயம் அடைந்த ரங்கசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, விஜியை கைது செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
📲Get App