🔥 TRENDING ‘ਸਾਡੇ ਬਜ਼ੁਰਗ, ਸਾਡਾ ਮਾਣ’ ਤਹਿਤ 14 ਅਕਤੂਬਰ... Meghalaya Man to Take SSLC Exam After... Tripura Admin Launches Mask Enforcemen... Tripura Reports Two More COVID-19 Deat... Tripura Reports 431 New COVID-19 Cases... Kharge Accuses Election Commission of...
29 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Jobs & Career

டிஜிட்டல் கல்வி பணியாளர்கள் உண்ணாவிரதம்: அவுட்சோர்சிங் முறை ரத்து செய்ய கோரிக்கை

✍️ Reporter: S Dinesh 🗓 29 Sep 2026, 04:14 PM 👁 16
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணியாற்றும் டிஜிட்டல் கல்வி பணியாளர்கள், அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்து தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி, செப். 29: தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணியாற்றும் டிஜிட்டல் கல்வி பணியாளர்கள் நல சங்கத்தினர், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (செப். 29) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், தங்களின் உழைப்பை சுரண்டும் அவுட்சோர்சிங் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், 6000க்கும் மேற்பட்ட பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

நூற்றுக்கணக்கான டிஜிட்டல் கல்வி பணியாளர்கள் கலந்துகொண்ட இந்த போராட்டத்தில், தங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
📲Get App