🔥 TRENDING Virat Kohli's Masterclass Leads India... Virat Kohli reaches 15,000 ODI runs as... Mehbooba Mufti Meets Mirwaiz Umar Afte... Kohli, Gill guide India to victory in... Congress May Face SP in First Uttar Pr... Virat Kohli Achieves Another Remarkabl...
28 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

மாற்றுத்திறனாளிகளிடம் பண மோசடி இருவர் கைது

✍️ Reporter: B Sakkariah 🗓 27 Sep 2026, 08:52 AM 👁 33
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில்அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மாற்றுத்திறனாளிகள், குடும்பத்தினரை குறி வைத்து ரூ.லட்சக்கணக்கில் பணம் பறித்த காயத்ரி 35, முத்துசங்கரனை 36, சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.


காரியாபட்டி முடுக்கன்குளத்தை சேர்ந்தவர் ராஜகுமாரி 47. இவர் மாற்றுத்திறனாளியின்தாய். இவரிடம்ராஜபாளையத்தைச் சேர்ந்த காயத்ரி, அலைபேசியில் அழைத்து, கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலப் பிரிவிலிருந்து பேசுவதாகக் கூறி, அவரது மகனுக்கு அரசு வேலை, எலக்ட்ரிக் பைக் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.


இதை நம்பி ராஜகுமாரி தன் நகைகளை அடகு வைத்துப் பல தவணைகளாக ரூ.5 லட்சம் வரை வங்கி கணக்கில் அனுப்பி வைத்து ஏமாந்துள்ளார். இதே நபர் நேற்று மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான கார்த்திகைவேல் என்பவரையும் அழைத்து, உங்கள் உறவினர்கள் பலரிடம் பணம் பெற்றுவிட்டோம். நீங்களும் ரூ.5 லட்சம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தருவோம் என்றார்.


சந்தேகமடைந்த வழக்கறிஞர், தனது உறவினர்களிடம் விசாரித்ததில், அவர்கள் பணம் கொடுத்து ஏமாந்திருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் உடனடியாக 1930 சைபர் கிரைம் உதவி எண், மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.


போலீசார் உடனடியாகச் சந்தேகத்திற்குரிய வங்கி கணக்குகளை முடக்கினர். பணம் தருவதாகக் கூறி அப்பெண்ணைக் காரியாபட்டிக்கு வர வைத்து போலீசில் சிக்க வைத்தார். உடன் வந்த ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்தமுத்து சங்கரனும், கைது செய்யப்பட்டார்.


விசாரணையில், இந்த போலி கும்பல் விருதுநகர் மாவட்டம் முழுவதும் பல்வேறு மாற்றுத்திறனாளிகளைக் குறிவைத்து, அரசு பணி ஆசை காட்டி ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளது தெரிந்தது. ஏமாந்தவர்கள் விவரம் குறித்து இருவரிடமும் போலீசார் விசாரிக்கின்றனர்.
📲Get App