🔥 TRENDING રાજકોટ–માલીયાસણ હાઇવે પર સાઇકલ સવાર યુ... Breaking news - लखनऊ में श्री राम जन्म... બ્રેકિંગ ન્યૂઝ બેંકોની 2 દિવસીય હડતાલ... अवैध मदिरा के निर्माण, धारण एवं विक्रय... Search Surge for 'Brampton Theft' Capt... Last-Minute Deal Saves India from 3-Da...
28 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

வேலூர் மாவட்ட ஓய்வூதியம்/உதவித்தொகை பெறுவோருக்கான முக்கிய அறிவிப்பு!

✍️ Reporter: A RAM PRABHU 🗓 24 Sep 2026, 10:24 PM 👁 33
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
மத்திய அரசின் உதவித்தொகை திட்டங்களான IGNOAP, IGNDAPS மற்றும் IGNDWPS ஆகியவற்றின் கீழ் உதவித்தொகை பெறும் பயன்பெறுபவர்கள், எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாக உதவித்தொகை பெற கீழ்க்கண்ட நடைமுறைகளைப் பின்பற்றுமாறு வேலூர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்:
​ஆதார் விவரங்களைப் புதுப்பித்தல்: பெயர், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண் மற்றும் கைரேகை பதிவு ஆகிய விவரங்களை ஆதார் மையத்தில் புதுப்பிக்க வேண்டும்.
​வங்கி கணக்கு இணைப்பு: வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை தவறாமல் இணைக்க வேண்டும்.
​குடும்ப அட்டை இணைப்பு: ரேஷன் கார்டுடன் (குடும்ப அட்டை) ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
​ஆவணங்கள் சமர்ப்பித்தல்: மேற்கண்டவாறு இணைக்கப்பட்ட ஆவணங்களை காட்பாடியில் உள்ள வட்டாட்சியர் (ச.பா.தி) அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
​அனைத்து தகுதிவாய்ந்த பயனாளிகளும் தங்களது உதவித்தொகை தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய, தவராமல் இந்நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
​— மாவட்ட ஆட்சியர், வேலூர்
📲Get App