🔥 TRENDING Virender Sehwag's Hilarious Reaction t... Scripted Video Circulates as Real Hara... Secret Spot Goes Viral, Crowds Overwhe... Seoul Blames Kyiv for Breach of Secrec... The Tribune Records Search for 'jijith... The Tribune publishes profile of Dr Sh...
28 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
கோவை சிங்காநல்லூரில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கோவை சிங்காநல்லூரில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

✍️ Reporter: Musthafa Hussain 🗓 20 Sep 2026, 11:42 PM 👁 120
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

கோவை சிங்காநல்லூரில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

அண்ணா அவர்களின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பொதுக்கூட்டம் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கோவை மாநகர் மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே. அர்ச்சுணன் தலைமை வகித்தார். மாநில கழக அம்மா பேரவை இணைச் செயலாளரும், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஆர். ஜெயராம் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிங்காநல்லூர் பகுதி கழகச் செயலாளர் கே. சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மேற்கொண்டனர். இதில் கட்சி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
📲Get App