🔥 TRENDING Union Minister Bhagirath Choudhary Ope... Navy Chief Urges Skyroot to Build Defe... મહીપત સિંહ ના પુત્ર પર 9 વ્યક્તિઓ દ્વા... Murli Manohar Joshi Criticises Loud Mu... Bill Gates Foundation Commits $1bn for... Health Authorities Make Acidity Medici...
28 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
ஈரோடு அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் அவதி!

ஈரோடு அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் அவதி!

✍️ Reporter: Musthafa Hussain 🗓 18 Sep 2026, 01:58 PM 👁 57
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

ஈரோடு அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் அவதி!

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாமில் போதிய முன் ஏற்பாடுகள் செய்யப்படாததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
​கூட்ட நெரிசல் மற்றும் வாக்குவாதம்
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாற்றுத்திறனாளிகளும், முதியவர்களும் தங்கள் உதவியாளர்களுடன் காலை முதலே மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். இதனால் அங்கு வரலாறு காணாத அளவிற்கு மக்கள் கூட்டம் கூடியது. நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்தவர்கள் இடையே முண்டியடிக்கும் சூழல் உருவானது.
​பொதுமக்கள் அவதி
வெயிலிலும் கூட்ட நெரிசலிலும் சிக்கி முதியவர்களும் மாற்றுத்திறனாளிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். அடிப்படை வசதிகளும், போதிய ஒழுங்கு அமைப்புகளும் செய்யப்படவில்லை எனக் கூறி, ஆத்திரமடைந்த பொதுமக்கள் மருத்துவமனை ஊழியர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
​இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பரப்பரப்பான சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.
📲Get App