🔥 TRENDING Breaking news - लखनऊ में श्री राम जन्म... બ્રેકિંગ ન્યૂઝ બેંકોની 2 દિવસીય હડતાલ... अवैध मदिरा के निर्माण, धारण एवं विक्रय... Search Surge for 'Brampton Theft' Capt... Last-Minute Deal Saves India from 3-Da... Indian Banks Closed Amid September 28-...
28 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
வேலூர் மாவட்ட ஆட்சியர் பி.எஸ். லீதலா அலெக்ஸ்  உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் ஆய்வுப்பயணம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் பி.எஸ். லீதலா அலெக்ஸ் உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் ஆய்வுப்பயணம்

✍️ Reporter: A RAM PRABHU 🗓 15 Sep 2026, 11:41 PM 👁 65
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
:வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அணைக்கட்டு வட்டாரத்தில் வரும் செப்டம்பர் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் அரசு திட்டங்கள் தொடர்பான ஆய்வுப் பயணம் நடைபெற உள்ளது.
இதன் ஒரு பகுதியாக செப்டம்பர் 16-ஆம் தேதி காலை முதல் அணைக்கட்டு வட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர், கல்வி, சுகாதாரம், சாலை மற்றும் பாலம், வேளாண்மை, உள்ளாட்சி உள்ளிட்ட துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் ஆய்வு செய்யப்பட உள்ளன.

பொய்கை ஊராட்சியில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சீரமைப்பு, கந்தநேரி அரசு பள்ளியில் புதிய வகுப்பறைகள் மற்றும் கணினி வகுப்பறை கட்டுமானம், பள்ளிகொண்டாவில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு செய்யப்படுகின்றன.

மேலும், சுகாதார துணை மையங்கள், சமூக சுகாதார வளாகம், சமூகக் கூடம், அரசு பள்ளிகளில் அறிவியல் ஆய்வகம் மற்றும் மாணவிகளுக்கான கழிப்பறை உள்ளிட்ட கட்டுமானப் பணிகளும் ஆய்வு செய்யப்பட உள்ளன.

அணைக்கட்டு–நெமந்தபுரம் சாலையில் உயர்மட்டப் பாலம், தடுப்புச்சுவர் மற்றும் கல்வெர்ட் பணிகள், மேலும் SH122 சாலை இருவழிச் சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.
மாலை நேரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெறுவதுடன், பொதுமக்களிடம் இருந்து குறைகள் மற்றும் மனுக்கள் பெறும் நிகழ்வும் நடைபெற உள்ளது.

செப்டம்பர் 17ஆம் தேதி காலை அணைக்கட்டு பகுதியில் தூய்மைப் பணிகள் மற்றும் குடிநீர் விநியோகம் தொடர்பான ஆய்வும், பின்னர் பள்ளிக் கல்வித்துறையின் காலை உணவுத் திட்டம் தொடர்பான ஆய்வும் நடைபெற உள்ளது.
மேலும் பல்வேறு பணிகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் பி.எஸ். லீலா அலெக்ஸ் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் ஆய்வுப்பயணம் செய்கிறார்.
📲Get App