🔥 ट्रेंडिंग धरुवार टोल प्लाजा पर हाईवे यातायात पुल... Shubman Gill and Virat Kohli each hit... India Clinches 8‑Wicket Victory Over W... रघुबीर यादव ने कहा, ‘पंचायत’ फ़िल्म सफ... पारिनीति चोपड़ा ने खुलासा किया माँ के... सुषांत सिंह राजपूत की बहन ने दावा किया...
28 सित. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
தாம்பரம் மாநகராட்சி டெண்டர் முறைகேடு புகார் – ஆணையர் மாற்றம்!”**

தாம்பரம் மாநகராட்சி டெண்டர் முறைகேடு புகார் – ஆணையர் மாற்றம்!”**

✍️ रिपोर्टर: Musthafa Hussain 🗓 15 सित. 2026, 11:14 PM 👁 47
यहाँ देखें: ▶️ YouTube
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

தாம்பரம் மாநகராட்சி டெண்டர் முறைகேடு புகார் – ஆணையர் மாற்றம்!”**

தாம்பரம் மாநகராட்சி டெண்டர் முறைகேடு புகார் – ஆணையர் அதிரடி மாற்றம்!
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் முறைகேடு தொடர்பாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மாநகராட்சியில் சுமார் 45 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இரண்டு டெண்டர்களில் முறைகேடு நடைபெற்றதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.
குறிப்பாக, சில பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பாகவே பணிகள் முடிக்கப்பட்டு, பின்னர் டெண்டர் விடப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அசோகத் தூண் அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிக்கு சுமார் 27 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில் டெண்டர் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், அதற்கு முன்பாகவே பணி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றதாக அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.
அதேபோல், சிட்லபாக்கம் பகுதியில் மற்றொரு பணியும் டெண்டர் நடைமுறை முடிவதற்கு முன்பாகவே முடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் எஸ். பாலச்சந்தர் ஐ.ஏ.எஸ். காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஆவடி மாநகராட்சி ஆணையர் ஆர். சரண்யா, தாம்பரம் மாநகராட்சி ஆணையராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த நான்கு மாதங்களில் தாம்பரம் மாநகராட்சியில் வெளியிடப்பட்ட 565 டெண்டர்களில் 309 டெண்டர்கள் இன்னும் திறக்கப்படாமல் இருப்பதாகவும் அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்று தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டெண்டர் நடைமுறையில் உண்மையில் முறைகேடு நடைபெற்றதா?
யார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்?
என்பது தொடர்பான விசாரணை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளன.
📲Get App