🔥 TRENDING Union Minister Bhagirath Choudhary Ope... Navy Chief Urges Skyroot to Build Defe... મહીપત સિંહ ના પુત્ર પર 9 વ્યક્તિઓ દ્વા... Murli Manohar Joshi Criticises Loud Mu... Bill Gates Foundation Commits $1bn for... Health Authorities Make Acidity Medici...
28 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
திருநெல்வேலி மாநகர எல்லை சோதனைச் சாவடிகளில் காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் நேரில் ஆய்வு
Local

திருநெல்வேலி மாநகர எல்லை சோதனைச் சாவடிகளில் காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் நேரில் ஆய்வு

✍️ Reporter: EDWIN MICHAEL RAJ 🗓 12 Sep 2026, 12:40 PM 👁 66
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

திருநெல்வேலி மாநகர எல்லைக்குட்பட்ட சோதனைச் சாவடிகளில் மாநகர காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினர்.

திருநெல்வேலி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பல்வேறு காவல் சோதனைச் சாவடிகளில், மாநகர காவல் ஆணையர் திரு. தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு பாதுகாப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, காவல் துணை ஆணையர் திரு. அன்ஷீல் நாகர் இ.கா.ப., (மேற்கு) மற்றும் காவல் துணை ஆணையர் திரு. இரமேஷ் பாபு (தலைமையிடம்) ஆகியோரும் உடன் சென்று சோதனைச் சாவடிகளின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டனர்.

ஆய்வின் போது, சோதனைச் சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்குப் பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக, எல்லைப் பகுதிகளில் வாகனச் சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

மேலும், சோதனைச் சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📲Get App