🔥 TRENDING प्रजापत समाज ने गणेश चतुर्थी का पर्व ध... आजादी के बाद से अधूरी सड़क: छपरा से रा... બ્રેકિંગ બેંકોની દેશવ્યાપી હડતાળ ટળી આ... Two Arrested for Displaying Criminal’s... Analyst Criticizes Taylor Swift’s ‘Cle... Taylor Swift Shines in Black‑Silver Go...
28 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
“அடித்ததில் என் தாடை எலும்பு உடைந்தது!” – மிசா கொடுமைகள் குறித்து ஸ்டாலின் பரபரப்பு விளக்கம் � 

“அடித்ததில் என் தாடை எலும்பு உடைந்தது!” – மிசா கொடுமைகள் குறித்து ஸ்டாலின் பரபரப்பு விளக்கம் � 

✍️ Reporter: Musthafa Hussain 🗓 10 Sep 2026, 09:16 AM 👁 84
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பாக சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேசியவை சர்ச்சைக்கு உள்ளாகியது என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மிசா காலத்தில் நடந்ததை கூறி அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் சட்டமன்றத்தில் நடந்த சில சர்ச்சைகள் மக்களுக்கு கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது

விஜய் கையை வைத்து தாடையை காட்டியது சரிதான். மிசா கைதிகளை காவலர்கள் தாக்கியபோது எனது தாடை உடைந்தது, அந்த தழும்பு இப்போதும் உள்ளது. மிசா சிறையில் பல கொடுமைகள் நடந்துள்ளன. யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது. என்று அவர் கூறியுள்ளார்.

அரசியலுக்காக கலைஞர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் கூறிய பொய் குற்றச்சாட்டை விஜயும் கூறுகிறார். முதலமைச்சருக்கு சந்தேகம் இருந்தால் சட்டமன்றத்தில் உள்ள நூலகத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம். பொறுப்பை உணர்ந்து விஜய் செயல்பட வேண்டும்.

அரசியல் பழிவாங்குதலுக்காகவே அமலாக்கத்துறை வழக்குகள் போடப்பட்டுள்ளதாக என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். தவெக ஆட்சியில் கொலை, பாலியல் குற்றங்கள் என சட்டம் ஒழுங்கு படுகுழியில் உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு என்று ஒரு மாண்பு உள்ளது. சட்டப்பேரவையை ரீல்ஸ் மன்றமாக மாற்றிவிட்டார் முதல்வர் விஜய். தமிழ்நாட்டை முன்னேற்ற விவாதம் செய்யுங்கள் விஜய். சட்டமன்றத்தில் தேவையற்ற சர்ச்சைகளை பேச வேண்டாம் என்பதே என் கோரிக்கை என்று அவர் தெரிவித்துள்ளார்.

வீட்டிற்கு வந்தபோது பிரச்சாரத்தில் அதிகம் விமர்சித்ததால் Sorry என நீங்கள் கூறியதை மறந்துவிட்டீர்களா? யாரை பற்றி பேசினாலும் கண்ணியத்தோடு பேசுங்கள் என விஜய்க்கு அறிவுறுத்தினேன். முதலமைச்சருக்கு உரிய கண்ணியத்துடன் வார்த்தைகளும் உடல்மொழிகளும் இருக்க வேண்டும். நாம்தான் மக்களுக்கு முன்னுதாரணம் என்பதை மறந்துவிடாதீர்கள். உண்மை ஊரை தாண்டுவதற்குள் பொய் உலகையே சுற்றிவிடும் என்ற பழமொழிதான் நடக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆட்சில இருக்கோமோ இல்லையோ, என்னைக்கும் தமிழ்நாட்டின் உரிமைக்காகவும் மக்களுக்காகவும் வளர்ச்சிக்காகவும் நாம சண்டை செஞ்சுக்கிட்டே இருக்கணும். அவங்க தாத்தாவுக்காக சண்டை செஞ்சோம், அவங்க அப்பாவுக்காக சண்டை செஞ்சோம் இப்போ அவங்களுக்காகவே சண்டை செய்வோம் என்று திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை அளித்துள்ளார்.

பரந்தூர் திட்டம் ரத்தால் தமிழக வளர்ச்சியை 15 ஆண்டு பின்னோக்கி கொண்டு போய்விட்டார் விஜய். மாற்றம் வேண்டும் என வாக்களித்தவர்கள் இது சரியான மாற்றமா என சிந்தியுங்கள். விவசாயிகளுக்கு பயிர்க்கடனை முழுமையாக விஜய் தள்ளுபடி செய்யவில்லை. ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர் என்று முதல்வர் விஜய் வாக்குறுதி அளித்திருந்தார். தற்போது தகுதி உள்ளவர்களுக்கு 3 சிலிண்டர் என அந்தர்பல்டி அடித்துள்ளார் விஜய். உரிமைத் தொகை ரூ.2,500 என்று விஜய் கூறினார், ஆனால் இன்னும் நாங்கள் கொடுத்த அதே ரூ.1000தான் தருகிறார். இன்னும் பல வாக்குறுதிகள் பற்றி விஜய் வாயையே திறக்கவில்லை என்று அவர் வெளிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார்.
📲Get App