🔥 TRENDING SRFTI to showcase students and faculty... 38 Bird Species Recorded in First Ever... BCCI Steps in to Revive Arunachal Cric... Lal Chowk Post Office Extends Hours to... Jammu & Kashmir Shifts Focus from Secu... ECI Says Omission of Candidate in Draf...
14 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
சேலத்தில் ரூ.15 கோடி மதிப்பிலான 600 கிலோ வெள்ளிப் பொருள்கள் கொள்ளை.

சேலத்தில் ரூ.15 கோடி மதிப்பிலான 600 கிலோ வெள்ளிப் பொருள்கள் கொள்ளை.

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 14 Oct 2026, 08:37 AM 👁 19
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
சேலத்தில் ரூ. 15 கோடி மதிப்பிலான 600 கிலோ வெள்ளிப் பொருள்களை முகமூடி கொள்ளையா்கள் திங்கள்கிழமை அதிகாலை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரில் தப்பிச் சென்ற அந்த கும்பலை பிடிக்க தனிப்படை போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.சேலம் பள்ளப்பட்டி, சின்னேரி வயக்காடு பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணி (58). இவா் அந்தப் பகுதியில் வெள்ளிப் பொருள்கள் தயாரிக்கும் பட்டறை நடத்தி வருகிறாா். பட்டறையில் தயாரிக்கும் வெள்ளிப் பொருள்களை அப்பகுதியில் தனது வீட்டில் உள்ள கடையில் வைத்து விற்பனை செய்துவந்தாா். மேலும், அந்த கட்டடத்தின் ஒரு பகுதியில் உள்ள கிடங்கில் இருப்பும் வைத்திருந்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு கடையில் விற்பனையை முடித்துவிட்டு, இரவு 10 மணி அளவில் கடையை பூட்டிவிட்டு சென்றாா். காவலாளி வெங்கடேசன் கடைக்கு காவலாக இருந்தாா்.
திங்கள்கிழமை அதிகாலை 2 மணி அளவில் காரில் அங்கு வந்த முகமூடி அணிந்த 4 போ் கொண்ட கும்பல், காவலாளியை தாக்கி, அவரை கட்டிப் போட்டுள்ளது. பின்னா், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை இரும்புக் கம்பியால் அடித்து நொறுக்கியுள்ளது.
தொடா்ந்து, கட்டட பின்பக்க மேல்மாடி வழியாக 4 பேரும் கடைக்குள் சென்று அங்கிருந்த வெள்ளிப் பொருள்கள், வெள்ளிக் கட்டிகள், கிடங்கில் வைத்திருந்த வெள்ளிக் கட்டிகளை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றனா்.
காவலாளியின் சப்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினா், கடையின் உரிமையாளரான பாலசுப்பிரமணிக்கு தகவல் தெரிவித்தனா். உடனடியாக அங்கு வந்த பாலசுப்பிரமணி, கடை மற்றும் கிடங்கு உள்ளே சென்று பாா்த்தபோது, ரூ. 15 கோடி மதிப்பிலான 600 கிலோ வெள்ளிப் பொருள்கள் கொள்ளை போனது அறிந்து அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
📲Get App