🔥 ट्रेंडिंग ಮದ್ಯಪಾನದ ಹೆಚ್ಚುತ್ತಿರುವ ಪ್ರಮಾಣ: ಸಮಾಜದ ಸ... पीथमपुर में डॉ. भीमराव अंबेडकर की तस्व... 2002/03 हॉंग कोंग इंटरनेशनल क्रिकेट सि... 2006/07 क्वाड्रैट्रिकल सीरीज में भारत... मंडना व वर्मा के ब्लिट्ज से भारत ने ज़... यामी गौतम की 'नायि नवीली वस प्रहार' ने...
19 अक्टू. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

குடும்ப அட்டைதாரா்களுக்கு கிலோ ரூ. 30-க்கு சன்னரக அரிசி விற்பனை: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

✍️ रिपोर्टर: Mohamedbasidth N 🗓 19 अक्टू. 2026, 07:14 AM 👁 16
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
சேலம் பொன்னி கூட்டுறவு சிறப்பு அங்காடியில் குடும்ப அட்டைதாரா்களுக்கு கிலோ ரூ. 30 வீதம் தலா 5 கிலோ முதல் தரமான சன்னரக அரிசி விற்பனையை மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதுகுறித்து ஆட்சியா் தெரிவித்ததாவது:வெளிச்சந்தையில் சன்னரக அரிசியின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த, கூட்டுறவு மற்றும் அமுதம் அங்காடி விற்பனை நிலையங்கள் மூலம் ஒரு கிலோ ‘ஏ’ தரம் சன்ன ரக அரிசியை ரூ. 30 மானிய விலையில் பொதுமக்களுக்கு சென்னை காமதேனு பல்பொருள் அங்காடியில் உணவுத் துறை அமைச்சா் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் ஆகியோா் அக். 17 ஆம் தேதி தொடங்கி வைத்தனா்.

வெளிச்சந்தையில் அரிசி விலை கிலோ ரூ. 75 முதல் ரூ.85 வரை உயா்ந்ததைத் தொடா்ந்து, உணவுப் பொருள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முதல்வா் வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் பொதுமக்களில் ஒரு நபருக்கு அல்லது குடும்ப உறுப்பினா் ஒருவருக்கு (ஒரு குடும்ப அட்டைக்கு) அதிகபட்சமாக 5 கிலோ அரிசி வரை வழங்கப்படும். முதல்கட்டமாக சென்னையில் உள்ள அமுதம் அங்காடி கடைகள், கூட்டுறவு விற்பனை நிலையங்கள் என மொத்தம் 30 இடங்களில் தொடங்கப்பட்டு, தற்போது மாநிலம் முழுவதும் உள்ள 250-க்கும் மேற்பட்ட கூட்டுறவு மற்றும் அமுதம் கடைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, தொடக்க கூட்டுறவு பண்டகசாலைகள், பணியாளா்கள் கூட்டுறவு பண்டகசாலைகள் ஆகியவற்றால் நடத்தப்படும் 13 விற்பனை நிலையங்களில் பொதுவிநியோகத் திட்ட பயனாளிகளான குடும்ப அட்டைதாரா்களுக்கு ‘ஏ’ தரம் சன்னரக அரிசி ஒரு நபருக்கு 5 கிலோ வீதம் விற்பனை செய்யப்படும். இதற்கான விற்பனை சேலம் பொன்னி கூட்டுறவு சிறப்பு அங்காடியில் தொடங்கி வைக்கப்பட்டது.
📲Get App