🔥 TRENDING RSS Chief Mohan Bhagwat Performs Shast... Allahabad HC grants bail to life convi... Pune Businessman Attacked with Gunfire... Fire Devastates Aadhaar Centre in Mori... Fire breaks out at Porwal Tar Products... Cyber Cell Constable Arrested Over All...
20 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

தங்க செயின்,ரூபாய் ஆகியவை திருட்டு,

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 20 Oct 2026, 07:46 AM 👁 15
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
சங்ககிரி; சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள கஸ்-துாரி பட்டி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து மனைவி பூங்கொடி. இவர் அக்கமாபேட்டையில் உள்ள அங்கன்வாடியில் சமையல் உதவியாள-ராக வேலை செய்து வருகிறார்.
கடந்த, 13ல் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று உள்ளார். மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்-தது. வீட்டிற்குள் சென்று பார்த்த போது பிரோவில் இருந்த, 2 பவுன் தங்க செயின், அரை பவுன் காயின், கால் பவுன் தங்க மோதிரம், கால் பவுன் காதுமாட்டல், கால் பவுன் மோதிரம் மற்றும் பீரோவில் இருந்த, 10 ஆயிரம் ரூபாய் ஆகியவை திருட்டு போயுள்ளது. இது குறித்து பூங்கொடி சங்-ககிரி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளியை அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 2 பெண்கள் வந்து சென்றது தெரிய வந்தது.
விசாரணைக்கு பின், ஈரோடு மாவட்டம் மேட்டு-பாளையம் பூங்காட்டூரை சேர்ந்த ஆனந்தகுமார் மனைவி வசந்தி, 35, மற்றும் சண்முகமூர்த்தி மனைவி லதா, 27, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட நகைகள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.
📲Get App