வேலூர் மாவட்ட ரேஷன் கடைகளில் 97.2% பேர் கைவிரல் ரேகை பதிவு
வேலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகை பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 97.2 சதவீதம் பேர் கைவிரல் ரேகையை பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 62 ஆயிரத்து 383 குடும்ப அட்டைகள் உள்ளன. இவற்றில் சுமார் 7 லட்சத்து 9 ஆயிரத்து 212 குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர்.
ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பலர் ரேஷன் கடைகளுக்கு சென்று தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்தனர். பதிவு செய்யாதவர்களுக்காக தொடர்ந்து 4 வாரங்கள் வார இறுதி நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று கைவிரல் ரேகையை பதிவு செய்தனர். மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நடக்க முடியாத வயதான முதியவர்களின் வீடுகளுக்கே சென்று கைவிரல் ரேகை பதிவு செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
இதுவரை 6 லட்சத்து 89 ஆயிரத்து 616 பேர் கைவிரல் ரேகையை பதிவு செய்துள்ளனர். இது மொத்த உறுப்பினர்களில் 97.2 சதவீதம் ஆகும். மீதமுள்ள 19 ஆயிரத்து 596 பேர் இன்னும் கைவிரல் ரேகை பதிவு செய்யவில்லை.
மீதமுள்ளவர்களும் பதிவு செய்யும் வகையில் தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.