🔥 ट्रेंडिंग જખૌમાં આર્ચેન કંપનીની જેટી સુધી પહોંચત... જલાલપોર તાલુકાના કોલાસણા ગામે "સેવા સં... ગાંધી જયંતિ: રાષ્ટ્રપિતા મહાત્મા ગાંધી... ਲੋਕ ਜਨ ਸ਼ਕਤੀ ਪਾਰਟੀ ਵੱਲੋਂ ਮਹਾਤਮਾ ਗਾਂਧੀ... जिम कैरी ने तीसरी बार शादी की, दीर्घका... तेजा सजाज़ 'द ट्रैटरस' के टेलगु संस्करण...
02 अक्टू. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

6 மாதங்களாக சம்பளம் கேட்டு ஊழியர்கள் போராட்டம்.

✍️ रिपोर्टर: Mohamedbasidth N 🗓 02 अक्टू. 2026, 08:41 AM 👁 9
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
மேட்டூர்: மேட்டூர் அணை பூங்காவில் ஒப்பந்த அடிப்படையில், 54 பெண்கள் பணிபுரிகின்றனர்.


அவர்களுக்கு தினமும், 470 ரூபாய் வீதம், மாத சம்பளம் வழங்கப்படுகிறது. ஒரு மாதம் வேலை செய்த பின், ஒரு மாதம் விட்டு மீண்டும் அடுத்த மாதம் என, சுழற்சி முறையில் பணிபுரிகின்றனர். அதன்படி ஒவ்வொருவரும் ஆண்டில், 6 மாதங்கள் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு, இரு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, ஒப்பந்ததாரர் மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது.அவர்களுக்கு கடந்த மார்ச் சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், அதற்கு பின், 6 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட ஊழியர்கள், நேற்று மேட்டூர் அணை செயற்பொறி-யாளர் வெங்கடாஜலம், உதவி செயற்பொறியாளர் செல்வராஜை சந்தித்து முறையிட்டனர். அவர்கள், உயர் அதிகாரிகளிடம் பேசி விரைவில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், அவர்கள் கலைந்து சென்றனர்.


நீர்வளத்துறை நிர்வாகத்தினர் கூறுகையில், 'கடந்த மே முதல் புது அரசு பொறுப்பேற்றுள்ளது. அந்த அரசு, ஒப்பந்த பணி, பணி-யாளர்களுக்கான பட்டியலை ஆய்வு செய்து நிதி ஒதுக்க வேண்டும். இதுவரை நிதி ஒதுக்காததால் சம்பளம் வழங்கப்பட-வில்லை' என்றனர்.
📲Get App