🔥 TRENDING રાજકોટ–માલીયાસણ હાઇવે પર સાઇકલ સવાર યુ... Breaking news - लखनऊ में श्री राम जन्म... બ્રેકિંગ ન્યૂઝ બેંકોની 2 દિવસીય હડતાલ... अवैध मदिरा के निर्माण, धारण एवं विक्रय... Search Surge for 'Brampton Theft' Capt... Last-Minute Deal Saves India from 3-Da...
28 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
திருநெல்வேலி மாவட்டத்தில் பண மோசடி முயற்சியில் 5 பேர் கைது, ரூ.3.68 லட்சம் ரொக்கம் பறிமுதல்
Local

திருநெல்வேலி மாவட்டத்தில் பண மோசடி முயற்சியில் 5 பேர் கைது, ரூ.3.68 லட்சம் ரொக்கம் பறிமுதல்

✍️ Reporter: EDWIN MICHAEL RAJ 🗓 18 Sep 2026, 06:18 PM 👁 59
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

வி.கே.புரம் காவல் நிலையத்தின் அதிரடி நடவடிக்கையில் 5 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.3.68 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட வி.கே.புரம் காவல் நிலையத்தின் கீழ் உள்ள அகஸ்தியர்பட்டியில் தெற்கு பாப்பான்குளத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (29) என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகக் கூறி வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

சென்னையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (47) ரூ.1 கோடி கடன் தேவைப்படுவதாகக் கூறி, முகம்மது அக்தர் (23) என்பவரை அணுகினார். முகம்மது அக்தர், தனது அறிமுக நபர்களின் மூலம் கடன் தொகையை வழங்குவதாகவும், அதற்காக ரூ.1 லட்சம் கமிஷன் வழங்க வேண்டும் எனவும் கூறி, ஜெயச்சந்திரனை வெங்கடேஷின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு பணம் இருப்பது போல் காட்டி, ஜெயச்சந்திரனிடம் கடன் பத்திரத்தில் கையெழுத்தும், 7 வங்கி காசோலைகளில் கையெழுத்தும் பெற்றதாகத் தகவல் கிடைத்தது. அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, மாடியில் ரூ.500 நோட்டுகள் அடங்கிய கட்டுகள் மற்றும் மாதிரி நோட்டுகள் என மொத்தம் ரூ.3,68,000 ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

வழக்குப் பதிவு செய்து, வெங்கடேஷ், ராஜேஷ், சிவசுப்பிரமணியன், கதிர்வேல் பாண்டி மற்றும் முகம்மது அக்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., பொதுமக்களை அறிமுகமில்லாத நபர்களின் மோசடி முயற்சிகளில் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தினார்.
📲Get App