🔥 TRENDING 10वीं बोर्ड परीक्षा अब साल में दो बार... वार्ड नं 15 में सीवर ढक्कन बदलने की अन... बॉर्डर इलाके में चुनावी यात्रा के दौरा... મહીસાગર જિલ્લામાં વકીલોની અચોક્કસ મુદત... जैसलमेर हजुरी समाज के मुखिया श्री गुमा... DSSSB ने विभिन्न पदों के परिणाम 26 अक्...
05 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
450 ஏக்கர் விவசாய நில மோசடி: திமுக பிரமுகர் மீது நடவடிக்கை கோரி விருதுநகர் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு
Agriculture

450 ஏக்கர் விவசாய நில மோசடி: திமுக பிரமுகர் மீது நடவடிக்கை கோரி விருதுநகர் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

✍️ Reporter: B Sakkariah 🗓 05 Oct 2026, 07:10 PM 👁 10
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

திருச்சுழி அருகே உள்ள ஐந்து கிராமங்களைச் சேர்ந்த 450 ஏக்கர் விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டி, பாதிக்கப்பட்ட விவசாயிகள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேனர்கள் ஏந்தி மனு அளித்தனர்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஐந்து கிராமங்களுக்கு உட்பட்ட 450 ஏக்கர் விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடியாகப் பதிவு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இதில் ஈடுபட்ட திமுக பிரமுகர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான செம்பொன் நெருஞ்சி, நெல்லிக்குளம், மீனாட்சிபுரம், செல்லையாபுரம், அம்பனேரி ஆகிய ஐந்து கிராமங்களில் 10,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்கள் ஐந்து தலைமுறைகளுக்கு மேலாக விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மதுரை பெருங்குடியைச் சேர்ந்த திமுக பிரமுகர் 'ஏர்போர்ட் பாண்டி' என அழைக்கப்படுகிற பி.எஸ்.ஆர்.பாண்டி, போலி ஆவணங்களைத் தயாரித்து அந்த நிலங்களை தனது பினாமி பங்குதாரரான மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 'ஜேவிஎஸ் எக்ஸ்போர்ட்' என்ற நிறுவனத்திற்கு பெயர் மாற்றம் செய்ததாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், அந்த நிறுவனம் அந்த விவசாய நிலத்தில் சோலார் மின் உற்பத்தி நிலையத்தை அமைத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் தாத்தா மற்றும் பாட்டியின் பெயரில் இருந்த சொத்துக்கள் எவ்வாறு அந்த நிறுவனத்திற்கு மாறியது என்பது தெரியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலர் அழகர்சாமி உடந்தையுடன் முன்னோர்களின் சொத்துக்கள் போலி ஆவணம் மூலம் தனியார் நிறுவனத்திற்குப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதன் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, திருச்சுழி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கையில் பேனர்கள் ஏந்தியவாறு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து மனு அளித்தனர்.
📲Get App