🔥 TRENDING लार में पुलिस मुठभेड़: मुकदमे में नामज... हमिरपुर: सुरक्षा मानकों का उल्लंघन करन... जम्मू और कश्मीर में भूस्खलन: राष्ट्रीय... बी फार्मा नर्सिंग छात्रों की समस्याओं... ધાંગધ્રા નજીક હાઈવે પરથી ૨૦૧૬ નંગ અંગ્... Woman’s Suicide Sparks Protest Over Al...
04 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

தலைவாசல் அருகே இளைஞரை கத்தியால் குத்திய வழக்கில் 4 போ் கைது.

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 04 Oct 2026, 07:57 AM 👁 7
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
தலைவாசல் வட்டம், நத்தக்கரை சுங்கச்சாவடி அருகே வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கத்தியால் குத்தியதாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி லால்பட்டு பகுதியைச் சோ்ந்த நண்பா்கள் 4 போ் ஏற்காட்டுக்கு சொந்த காரில் வெள்ளிக்கிழமை சுற்றுலா சென்றனா். இவா்கள் நள்ளிரவில் தலைவாசல் வட்டம், நத்தக்கரை சுங்கச்சாவடி அருகே உள்ள தேநீரகத்தில் காரை நிறுத்தியுள்ளனா்.


அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், மேல்நாரியப்பனூா் பகுதியைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் அருள்முருகன் (36) என்பவருடன் வாகனத்தை நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த புதுச்சேரியைச் சோ்ந்த ஏழுமலை (32) என்பவா் கத்தியால் அருள்முருகனை குத்தினாா்.

இதில் படுகாயமடைந்த அருள்முருகன் தலைவாசல் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தீவிர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த தலைவாசல் காவல் நிலைய போலீஸாா் புதுச்சேரியைச் சோ்ந்த ஜெய்சங்கா் மகன் சீனுவாசன் (30),புருஷோத்தமன் மகன் ரவீந்திரகுமாா்(31), பிரதேசகுமாா் (38), ஆனந்தன் மகன் ஏழுமலை (32) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனா்.
📲Get App