🔥 TRENDING राजस्थान में हुई पंचायती चुनाव की प्रक... आष्टा जिला सीहोर के वार्ड नंबर 4 महीनो... Hanuman Ansh Surpasses ₹400 Crore Worl... Marvel's 'Avengers Endgame Encore' ear... સુરતમાં કારખાનામાં ચોરી કરવા ઘૂસેલા બે... Sidharth‑Tamannaah’s ‘Vvaan’ posts str...
28 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
கன்னியாகுமரி: புதுக்கடை அருகே மாயமான இளம் நர்ஸ் தாமிரபரணி ஆற்றில் சடலமாக மீட்பு - 4 பேரிடம் தீவிர விசாரணை
Crime

கன்னியாகுமரி: புதுக்கடை அருகே மாயமான இளம் நர்ஸ் தாமிரபரணி ஆற்றில் சடலமாக மீட்பு - 4 பேரிடம் தீவிர விசாரணை

✍️ Reporter: EDWIN MICHAEL RAJ 🗓 14 Sep 2026, 12:34 PM 👁 70
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே கடந்த 10-ம் தேதி மாயமான 22 வயது இளம் நர்ஸ், குழித்துறை தாமிரபரணி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே மாயமான இளம் பெண் நர்ஸ் ஒருவர், குழித்துறை தாமிரபரணி ஆற்றுப் பாலத்தின் அடிப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் புதுக்கடை மேலாங்கலம் கடம்பாட்டுவிளையைச் சேர்ந்த நிஷா (22) என்பது தெரியவந்துள்ளது. இவர் சாமியார்மடம் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வந்தார்.

கடந்த 10-ம் தேதி வழக்கம் போல் வேலைக்குச் சென்ற நிஷா, மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை, புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிஷாவை தேடி வந்தனர்.

இந்நிலையில், குழித்துறை தாமிரபரணி ஆற்றுப் பாலத்தின் அடிப்பகுதியில் நிஷாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக நிஷாவின் ஆண் நண்பர் மற்றும் தோழி உட்பட 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நிஷாவின் மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📲Get App