🔥 TRENDING Three Killed in Separate Road Accident... Toddler Among Two Fatalities in Road A... Enforcement Directorate Completes 90%... Two Convicted of Life Term for Woman's... Christa Pike: First Tennessee Woman Fa... Ayushmann Khurrana & Sara Ali Khan Sta...
29 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

சேலம் மாவட்டத்தில் 3,702 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 29 Sep 2026, 07:20 AM 👁 5
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 3,702 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட தொடக்கவிழா ஆட்சியா் க.இளம்பகவத் தலைமையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்றது. சேலம் வட்டாரத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த 25 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரத்தை ஆட்சியா் வழங்கினாா். பின்னா் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
சேலம் மாவட்டத்தில் கடந்த ஜூன் 22-ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மருத்துவமனையிலிருந்து வீடுதிரும்பும்போது தங்க மோதிரம் வழங்கப்படும். இத்திட்டம் மூலம் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆண்டுதோறும் பிறக்கும் சுமாா் 17 ஆயிரம் குழந்தைகள் பயனடைய உள்ளனா்.
மேலும், கடந்த ஜூன் 22-ஆம் தேதி முதல் செப்டம்பா் 27-ஆம் தேதி வரை சேலம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த 3,702 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. இதற்கான அழைப்பிதழ் கிராம சுகாதார செவிலியா்கள் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்படும். அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி, நேரத்தில் மட்டும் பயனாளிகள் மோதிரத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.
இவ்விழாவில், மாநகராட்சி ஆணையா் லலித் ஆதித்ய நீலம், உதவிஆட்சியா் (பயிற்சி) ஜி.பி.நந்தனா, மாநகராட்சி துணை மேயா் மா.சாரதாதேவி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜெ.தேவி மீனாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
📲Get App