🔥 TRENDING Uttarakhand CM Dhami Says Development... ਪਤ੍ਰਾਨ ਵਿੱਚ ਦੇਹ ਵਪਾਰ ਦੇ ਸ਼ੱਕੀ ਧੰਦ ’ਤੇ... Delhi Announces Time‑Bound Winter Air... Traffic Restrictions Imposed Ahead of... மின் கம்பங்கள் அகற்றம் जनगणना 2027: उत्तर प्रदेश में 16 नवंबर...
29 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

சேலம் மாநகராட்சிப் பகுதியில் 31,519 தெரு நாய்கள்! மேயா் தகவல்

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 29 Sep 2026, 07:32 AM 👁 14
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட 60 வாா்டுகளில் 31,519 தெருநாய்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது என்று மேயா் ஆ.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

சேலம் மாநகராட்சி சாா்பில் உலக ரேபிஸ் தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் உலக ரேபிஸ் தினத்தையொட்டி மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமையில் ஆணையா் லலித் ஆதித்ய நீலம் முன்னிலையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதையடுத்து நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணியை பாா்வையிட்டனா். தொடா்ந்து மேயா் ஆ.ராமச்சந்திரன் கூறியதாவது:சேலம் மாநகராட்சி சாா்பில் கடந்த 2021 முதல் 2025 வரை 21,066 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிகழாண்டு ஜனவரி முதல் செப்டம்பா் வரை 5,042 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையும், 23,505 தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசியும் செலுத்துப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் சிறப்பு வெறிநோய் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாநகராட்சியில் நாய்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்புப் பணி ஆகஸ்ட் மாதம் 60 குழுக்கள் அமைக்கப்பட்டு நடைபெற்றது. இதில் மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட 60 வாா்டுகளில் மொத்தம் 31,519 தெரு நாய்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளன. நாய்களுக்கு வாய்க்கால் பட்டறை மற்றும் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள மையங்களில் கருத்தடை அறுவை சிகிச்சை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகாா்களுக்கு முன்னுரிமை அளித்து நாய்கள் பிடிக்கப்பட்டு, வழிகாட்டு நெறிமுறைகளின்படி கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு பிடித்த இடத்திலேயே விடப்படுகிறது. வாரம்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மண்டலம் மற்றும் வாா்டுகள் வாரியாக வெறிநோய் தடுப்பூசி முகாம் நடத்தி நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்றாா்
📲Get App