தீபாவளி பண்டிகையையொட்டி, சேலம் மாநகரில் குவிந்திருந்த, 200 டன் பட்டாசு கழிவுகளை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் அகற்றினர்.
यहाँ देखें:
📘 Facebook
தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசு கழிவுகளை அகற்ற நான்கு மண்டலங்களுக்கும் வழக்கமான வாகனங்களை விட கூடுதலாக, 1 ஜே.சி.பி., 2 டிப்பர் மற்றும் 12 இலகு ரக வாகனங்கள் வழங்கப்பட்டது. குப்பை கழிவுகள் அகற்றும் பணியில், 791 நிரந்தர பணியாளர்களுடன், 1,608 தனியார் துாய்மை பணியாளர்கள் இணைந்து பணியாற்றினர். இதில் வழக்கமான குப்பை திடக்கழிவுகளுடன் கூடுதலாக, 200 டன் பட்டாசு கழிவுகளையும் அகற்றியுள்ளனர்.