🔥 TRENDING कानून-व्यवस्था बिगाड़न े की आशंका पर स... સુરતમાં લાજપોર મધ્યસ્થ જેલમાં કાચા કામ... સુરતમાં કેદી ચિરાગ રેવા પત્નીની પ્રસૂત... महाविद्यालय मे ं हुआ व्याख्यान का आयोज... कलेक्टर द्वारा महेवा प्राथमिक विद्यालय... आज धूमधाम से निकलेगी गुमानो माता की प्...
26 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் 18 வயது வாலிபர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் தோகத்தை ஏற்படுத்தியுள்ளது

✍️ Reporter: Vasanth Kumar 🗓 26 Oct 2026, 09:12 PM 👁 12
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

கிராமிய காவல்துறையினர் பேருந்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில், சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில், நகராட்சி குப்பைக் கிடங்கிற்கு எதிரே வாணியம்பாடி கோணாமேடு அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த தீபன் குமார் (18), இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடி நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி வந்த தனியார் பேருந்து, தீபன் குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த தீபன் குமார், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வாணியம்பாடி கிராமிய போலீசார், விரைந்து சென்று உயிரிழந்த தீபன் குமாரின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் தனியார் பேருந்தைப் பறிமுதல் செய்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாணியம்பாடி அருகே பேருந்து மோதிய விபத்தில் 18 வயது வாலிபர் உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
📲Get App