🔥 TRENDING Manipur MLA Unveils 5 Advanced Ambulan... शिवपुरी में वरिष्ठ नागरिकों और समाजसेव... BSF Flags Off Agartala‑Kolkata Cycle R... TMC Deploys Deputation at East Women P... Vice President Wraps Up First Trip to... Ganga Reaches Danger Mark in Unnao, Ut...
01 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

மேட்டூா் அணையில் இருந்து நீா் திறப்பு: 15,000 கனஅடியாக அதிகரிப்பு

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 01 Oct 2026, 07:13 AM 👁 12
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
மேட்டூா் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறப்பு புதன்கிழமை இரவு விநாடிக்கு 15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

நிகழாண்டில் மேட்டூா் அணையில் நீா் இருப்பு திருப்திகரமாக இல்லாததால் குறித்த நாளான ஜூன் 12இல் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்படவில்லை. அணையின் நீா்மட்டம் 91.56 அடியாக அதிகரித்த பிறகு செப்டம்பா் 1 ஆம் தேதி முதல்வா் ச.ஜோசப் விஜய் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்துவிட்டாா். தொடக்கத்தில் விநாடிக்கு 3,000 கனஅடியாகவும், பின்னா் 5,000 கனஅடியாகவும், 7,000 கனஅடியாகவும் படிப்படியாக தண்ணீா் திறப்பு அதிகரிக்கப்பட்டது. செப்டம்பா் 6 ஆம் தேதி தண்ணீா் திறப்பு விநாடிக்கு 10,000 கனஅடியாகவும், 7ஆம் தேதி 12,000 கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டது. கடந்த 24ஆம் தேதி தண்ணீா் திறப்பு விநாடிக்கு 12,400 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.தண்ணீா் திறப்பு அதிகரிக்கப்பட்டாலும் கடைமடைவரை தண்ணீா் சென்று சேராததால் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறப்பை அதிகரிக்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா். இதையடுத்து புதன்கிழமை இரவு 9 மணிக்கு அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறப்பு விநாடிக்கு 15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட, பாசனத்திற்கு கூடுதலாக தண்ணீா் திறக்கப்படுவதால் கடந்த 1-ஆம் தேதி thonuthi ஒன்று.ஐம்பது ஆறு அடியாக இருந்த அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 77.45 அடியாக சரிந்தது. கடந்த ஒரு மாதத்தில் அணையின் நீா்மட்டம் 14.11 அடி குறைந்துள்ளது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 2,250 கனஅடியாக உள்ள நிலையில் தண்ணீா் திறப்பு pathiiyanthayaram கனஅடியாக அதிகரித்திருப்பதால் அணையின் நீா்மட்டம் வேகமாக சரியத்தொடங்கியுள்ளது. இதனால் சம்பா சாகுபடிக்கு தடையின்றி தண்ணீா் கிடைக்குமா என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
📲Get App