நாகை துறைமுகத்தில் 1ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: 17-ம் தேதி தீவிர புயலாக வலுவடைய வாய்ப்பு; நாகப்பட்டினம் துறைமுகத்தில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 860 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை புயலாகவும், நாளை மறுநாள் நவம்பர் 17 மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாகவும் வலுவடையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நாகப்பட்டினம், சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.